கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

0
92
#image_title

கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு தக்காளி வைத்து தயாரிக்கப்படும் உணவு என்றால் அலாதி பிரியம். இந்த தக்காளியில் தொக்கு, கடையல், குழம்பு என்று பல வகைகளில் செய்து உண்ணப்படுகிறது.

அந்தவகையில் “டொமேட்டோ கறி” கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி – 3

*வெங்காயம் – 1

*பச்ச மிளகாய் – 3

*கறிவேப்பிலை – 1கொத்து

*பூண்டு – 7 பல்

*இஞ்சி – 1 துண்டு

தாளிக்க:

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

*சின்ன வெங்காயம் – 5

*கறிவேப்பிலை – 1 கொத்து

*மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி பொடி – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*தேங்காய் – 1/2 கப்

செய்முறை:-

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து நீள்வாக்கில் நறுக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும்.

பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும்.

அடுத்து 1/2 கப் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும். பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ளவும்.

தக்காளி கலவை கொதிக்கும் தருணத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து கிளறி பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி டொமேட்டோ கறியில் சேர்த்து கிளறி விடவும். இந்த டொமேட்டோ கறி சப்பாத்தி, சூடான சாதம், பூரி உள்ளிட்டவைகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleஇதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!
Next article‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!