இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

0
43
#image_title

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

வாயுத் தொல்லையால் பலர் அவதியுற்று வருகின்றனர். உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது.

இந்த வாயுத் தொல்லையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்ய விட்டால் பின்னாளில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உடலில் அதிகளவு கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:-

*சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம் மற்றும் உப்பசம் ஆகுதல்

*தொடர்ந்து ஏப்பம் வருதல்

*ஆசன வாய் வழியாக தொடர்ந்து வாயு வெளியேறுதல்

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*எளிதில் செரிக்காத உணவை எடுத்துக் கொள்ளுதல்

*மலத்தை அடக்கி வைப்பது

*அதிக காரம் நிறைந்த உணவை உண்ணுதல்

*துரித உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

*மன அழுத்தம்

 

வாயுத் தொல்லையை சரி செய்ய எளிய வழி இதோ:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு

*ஓமம்

*சீரகம்

*தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். இதை முந்தின நாள் இரவு செய்ய வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சோம்பு + ஓமம் + சீரகம் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் உடனடியாக வெளியேறி விடும்.