‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!
சர்க்கரை (நீரிழிவு) ஒரு இரவில் உருவாகும் நோயல்ல. இவை ஒரு அமைதியான உயிர்கொல்லி நோயாகும். ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டால் அவரால் அதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. சில நாட்களுக்கு பின் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாமல் போகும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோயாக உருவெடுக்கிறது.
சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-
*பரம்பரை நோய்
*உடல் பருமன்
*மன அழுத்தம்
*அடிக்கடி கர்ப்பம் அடைதல்
*அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல்
*உயர் இரத்த அழுத்தம்
*இரத்த மிகை கொழுப்பு
*சினைப்பை நீர்க்கட்டி
*சோம்பலான வாழ்க்கை முறை
சர்க்கரை நோய் அறிகுறிகள்:-
*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்
*அதிகப்படியான உடல் சோர்வு
*தண்ணீர் தாகம் அதிகரித்தல்
*கண் பார்வை மங்குதல்
*அதிகப்படியான தலைவலி
நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலை இரத்த சரக்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-
*பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ, கார்போஹைட்ரேட்.
கறிவேப்பிலை பானம் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*கறிவேப்பிலை
*தேன்
*லெமன் சாறு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் 1 கொத்து கறிவேப்பிலையை அதில் சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் முழுவதும் தண்ணீரில் இறங்கும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி லெமன் சாறு மற்றும் தேன் சிறிதளவு சேர்த்து கலந்து பருகவும். இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும்.