“மஞ்சள் + கடலை மாவு” போதும் முகத்தை வெள்ளையாக்க! 100% அனுபவ உண்மை!!
ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் அசைக் கொள்வார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது
தேவையான பொருட்கள்:-
*கஸ்தூரி மஞ்சள்
*கடலை மாவு
*தயிர்
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.
பயன்படுத்தும் முறை…
இதை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தை துடைத்து விட்டு தயார் செய்து வைத்துள்ள க்ரீமை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும்.
30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தோம் என்றால் முகம் அதிக பொலிவாக காணப்படும்.
மஞ்சள் மற்றும் கடலை மாவின் பயன்கள்:
நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு இருக்கிறது. இந்த மஞ்சளை பயன்படுத்துவதினால் முகத்தில் உள்ள நுண்கிருமிகள் அழிந்து விடும்.
கடலை மாவு சருமத்தில் உள்ள வறட்சியை போக்க உதவும்.
மஞ்சள் மற்றும் கடலை மாவு முகத்தில் உள்ள துளைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க மஞ்சள் மற்றும் கடலை மாவு சிறந்த தீர்வாக இருக்கும்.