கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

0
181
#image_title

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள “சமூகப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 30 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக நலத்துறை (செங்கல்பட்டு)

பணியிடம்: செங்கல்பட்டு

பதவி:

சமூகப் பணியாளர்

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கிரகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கான அதிகபட்ச வயது 42 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,536/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் chengalpattu.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். A80, 10வது குறுக்குத் தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு – 603001.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 30-11-2023

Previous articleகட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?
Next articleமீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!