மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!

0
100
#image_title

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!

கடந்த சில வாரங்களாக தமிழக்தை பருவமழை, புயல் மழை என்று மாறி மாறி துவைத்தெடுத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிதிலி புயல் உள்ளிட்டவைகளால் தமிழகம் மற்றும் புதுவையை கனமழை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம்.

தொடர் கனமழையால் நீர் நிலைகள் அனைத்தும் விரைந்து நிரம்பி வரும் அதே நேரத்தில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து பயிர்கள் அழுகும் சூழலில் இருப்பதால் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவானா காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையை கடந்த நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வருகின்ற 26 ஆம் தேதி உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் ஒரு புயல் உருவாக வாய்ப்பு இருபாதகவும் வானிலை ஆய்வு மைய வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.