இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !!

0
137
#image_title

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !!

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியின் தோல்விக்கு பின் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் மேத்யூவ் ஷார்ட் 13 ரன்களுடன் வெளியேற அடுத்து விளையாடிய ஜோஷ் இங்கிலீஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தங்களது அதிரடி ஆட்டத்தால் ரன்களை குவிக்க தொடங்கினர். அரை சத்தத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் ஜோஷ் இங்கிலீஸ் 47 பந்துகளில் அரை சத்தம் விளாசினார். தொடர்ந்து 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா அணி 209 ரன்னை இந்தியாவுக்கு இலக்காக்க நிர்ணயித்தது.

உலக கோப்பை தோல்விக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் விளையாடிய ஜெய்ஸ்வால் தனது நிதான ஆட்டத்தால் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அதிரடி ஆட்ட நாயகன் இஷான் கிஷான் ஜோடி அசத்தலாக விளையாடி மளமளவென ரன்களை குவிக்கத் தொடங்கியது. இஷான் கிஷான் அரை சதம் எடுத்து அணியை வெற்றி பாதையை நோக்கி நகர்த்த வைத்தார். தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது அபார ஆட்டத்தால் 80 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி மன்னன் ரிங்கு சிங் முதல் இரு பந்துகளில் ஐந்து ரன்களை எடுத்தார். அடுத்த 4 பந்துகள் இருந்த நிலையில் அக்சர் படேல் ஆட்டமிழக்க மீதம் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்து களமிறங்கிய அர்ஸ்தீப் சிங் மற்றும் ரிங்கு சிங் ரன் எடுக்க முயன்ற போது 2 வது ரன்னில் அர்ஸ்தீப் சிங் ரன் அவுட் ஆனார். இறுதியாக 1 பந்தில் 1 ரன் என்ற நிலைக்கு சென்ற இந்திய அணிக்கு அது திக் திக் நிமிடமாக இருந்தது. இறுதி பந்தில் 6 அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங்.

உலக கோப்பை இறுதி போட்டியில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை சிறந்த வீரர் என்று நிரூபித்து விட்டார் என்று அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Previous articleசூர்யக்குமாரின் அதிரடியான பேட்டிங்! முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா!!
Next articleதமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!