சூர்யக்குமாரின் அதிரடியான பேட்டிங்! முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா!!

0
48
#image_title

சூர்யக்குமாரின் அதிரடியான பேட்டிங்! முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் சூர்யக்குமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்ததால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று(நவம்பர்23) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்த ஜோஸ் இங்கிலிஷ் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

ஒருபுறம் நிதானமாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 41 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மற்றொரு புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இங்கிலிஷ் சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இங்கிலிஷ் 50 பந்துகளில் சதமடித்து 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 209 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரு பந்தைக்கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்சிவால் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சூர்யக்குமார் யாதவ் இருவரும் அதிரடியாக பேட்டிங் செய்யத் தொடங்கினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சூர்யக்குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அரைசதம் அடித்தனர்.

இஷான் கிஷன் அரைசதம் அடித்து 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் அரைசதம் அடித்து 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் இந்திய அணிக்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அதிரடியான ஒரு சிக்சர் அடித்து முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் டன்வீர் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் சீன் அபாட், பெஹன்ட்ராப், மேத்யூ ஷார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சிறப்பாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல் டி20 போட்டியில் வென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது.