உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
138
#image_title

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையோடு புயல் மழையும் சேர்ந்து தமிழகத்தை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் சூழலில் இந்த மாத இறுதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் குமரியின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இன்று அதாவது நவம்பர் 27 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இது நாளை 28 ஆம் தேதி முதல் அடுத்த டிசம்பர் 02 ஆம் தேதி வரை நீடிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்
காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Previous articleஇந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!!
Next articleபாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?