ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் அசத்தல் வேலை..!! ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

Photo of author

By Divya

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் அசத்தல் வேலை..!! ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் காலியாக உள்ள Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தபால் மூலம் வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: ஊரக மேம்பட்டு துறை அமைச்சகம்

பதவி: Accounts Officer

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 04

பணிக்கான தகுதி: Accounts Officer பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் துறை சார்ந்த பணிகளில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கான அதிகப்பட்ச வயது 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்வு முறை: Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-01-2024