இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
194
#image_title

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று(டிசம்பர்16) முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு இருக்கின்றது.

தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை தொடங்கிய சில இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலில் இன்று(டிசம்பர16) முதல் அடுத்த நான்கு நாட்கள் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக இன்று அதாவது டிசம்பர் 16ம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை அதாவது டிசம்பர் 17ம் தேதி திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிகவும் பலத்த கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல தென்காசி, விழுப்புரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

டிசம்பர் 18ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 19ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பலத்த கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.