ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

0
259
#image_title

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது.
இந்த மாவட்டங்களின் நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையமானது, கனமழை இன்னும் சில தினங்களுக்கு நீட்டிக்கக்கூடும் என்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுத்து இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழையால் இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என்று அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்கள் மட்டும் இன்றி தென் தமிழகத்தின் விருதுநகர், சிவங்ககை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleடிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 இறுதி நாள்..!!
Next articleதென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை! அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!