இது வெறும் டிரைலர் தான்! மழையைப் பற்றி கூறிய வெதர்மேன்!

0
269
#image_title

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கனமழை பெய்து வருகிறது. அதில் தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகவும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் இது வெறும் டிரைலர் மட்டும்தான் இன்னும் மெயின் பிக்சரே வரவில்லை என்ற நிலையில் வெதர்மேன் தரும் ரிப்போர்ட்டுகள் நமக்கு அச்சத்தையே எழுப்புகின்றது.

 

 சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பிரதீப் ஜான், பேஸ்புக்கில் கூறியதாவது , தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

 

ஏற்கனவே சென்னை வானிலை மையம் இன்று தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுவத்த நிரையில், இவரும் இப்படி சொல்லி இருப்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  முழங்கால் அளவு தண்ணீர் வந்து மக்கள் அவதிப்படுகின்றனர். ஆனால் இன்னும் அதிதீவிர கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தந்துள்ள அறிவிப்பில் மக்கள் அச்சப்பட்ட தான் போயிருக்கின்றனர்.

 

குமரி கடலில் ஏற்படும் வளிமண்டல சுழற்சி காரணமாகவே இந்த மழை பெய்து வருகிறது. மழை அதிகமாக பெய்யாது என்று கூறி அதில் தீவிரமாக பெய்யும் என்ற அச்சத்தை தந்துள்ளார் வெதர்மென்.

 

மற்ற இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து!
Next articleஸ்ரேயா கோசலே வியந்துபோய் போட்ட போஸ்ட்! இதை கேளுங்க!