கேரளா ஸ்டைல் பூண்டு சட்னி – சுவையாக செய்வது எப்படி?

0
299
#image_title

கேரளா ஸ்டைல் பூண்டு சட்னி – சுவையாக செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு சிறந்த காமினேஷனான பூண்டு சட்னியை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*நல்லெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

*பூண்டு – 1/2 கப்

*உப்பு – தேவைக்கேற்ப

*வரமிளகாய் – 4 (சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)

*காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

தாளிப்பதற்கு:-

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வரமிளகாய் – 1

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மட்டும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி அடுப்பை அணைக்கவும். பின்னர் அதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அதனுடன் ஊற வைத்துள்ள வரமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் கேரளா பூண்டு சட்னி தயார்.

Previous articleசருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!!
Next articleஉடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!!