மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

0
208
#image_title

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும்.

2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும்.

4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் கலர் கோலம் போட வேண்டும். அவ்வாறு கோலம் போடும் பொழுது கோலத்தின் நடுவில் சாணம் அல்லது மஞ்சள் பிடித்து வைக்க வேண்டும்.

5)மார்கழி மாதம் காலையில் வீட்டு வாசல் முன் இரண்டு தீபங்களை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகும்.

6)மாலை நேரத்திலும் 2 தீபங்களை ஏற்றுவது நல்லது. நெய், தீப எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுவது சிறப்பு.

7)விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அரச மர பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.

8)மார்கழி மாதத்தில் கோயிலில் திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடுவார்கள். இந்த பாசுரத்தை தினமும் படித்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

9)மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.

10)வீட்டு அருகில் இருக்கும் கோயிலுக்கு தங்களால் இயன்ற பூஜை பொருட்களை வாங்கி கொடுப்பது சிறப்பு.

Previous articleஇடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?
Next articleபணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!