கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் – இப்படி செய்தால் மணக்கும் சுவையில் இருக்கும்..!!

0
186
#image_title

கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் – இப்படி செய்தால் மணக்கும் சுவையில் இருக்கும்..!!

ரசம் எனறால் அனைவருக்கும் பிடிக்கும். இவை சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்வதோடு ஜீரண மேம்பாட்டிற்கு உதவுகிறது. ரசத்தில் புளி ரசம், தூதுவளை ரசம், பூண்டு ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம் என பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்றான தக்காளி ரசம் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி – 2

*வேக வைத்த துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*புளி – 1 லுமிச்சை அளவு

*பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

*கொத்தமல்லி – 1 1/2 தேக்கரண்டி

*மிளகு – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி – 1/2 இன்ச்

*பூண்டு – 3 பல்

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

தாளிப்பதற்கு:-

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*வரமிளகாய் – 2

*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை…

முதலில் ஒரு கிண்ணத்தில் புளி போட்டு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைக்க வேண்டிய பொருட்களை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளளவும்.

அடுத்து தக்காளியை வெட்டி பிசைந்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து பிசைந்து வைத்துள்ள தக்காளி பழம், 1/2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

தக்காளி நன்கு வெந்தது வந்ததும் அதில் பெருங்காயத் தூள் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து சில நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதில் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பின்னர் வாசனைக்காக அதில் சிறிதளவு கொத்தமல்லி தழைகளை தூவவும். இவ்வாறு செய்தால் கேரளா தக்காளி ரசம் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.