தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்..!!

0
259
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்..!!

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்கு எந்த தானம் செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழேகொடுக்கப்ட்டு இருக்கிறது.

நட்சத்திரம் தானம்

1)அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருந்து பொருட்களை தானமாக வழங்கலாம்.

2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னதானம் செய்யலாம்.

3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரும்பு பொருட்களை தானமாக வழங்கலாம்.

4)ரோகிணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஊனமுற்றோர்களுக்கு வண்டி, வாகனம் தானமாக வழங்கலாம்.

5)மிருகசீரிஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் இயன்ற தானத்தை வழங்கலாம்.

6)திருவாதிரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று ஒருவேலை அன்னதானம் செய்து வரலாம்.

7)புனர்பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரச உதவிகளை பிறருக்கு செய்யலாம்.

8)பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோதானம் செய்யலாம்.

9)ஆயில்யம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரம் நடுவது, புற்று கோயிலுக்கு அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

10)மகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழை குழந்தைகளுக்கு துணிமணி வாங்கி கொடுக்கலாம்.

11)பூரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்கு சிவலிங்கத்தை தானமாக வழங்கலாம்.

12)உத்திரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வயதானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

13)அஸ்தம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண வைபவங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

14)சித்திரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம்.

15)சுவாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு தேவையான உதவி செய்யலாம்.

16)விசாகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்கு விக்ரகம் தானம் செய்யலாம்.

17)அனுஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

18)கேட்டை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அர்ச்சகர்கள், வேத விற்பன்னருக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

19)மூலம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறிய சிறிய பொருட்கள் வாங்கி பிறருக்கு கொடுக்கலாம்.

20)பூராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடை, நிழற்குடை உள்ளிட்ட பொருட்களை தானமாக வழங்கலாம்.

21)உத்திராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில் யானைகளுக்கு உணவு தானம் செய்யலாம்.

22)திருவோணம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காது கேட்காதவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

23)அவிட்டம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழை குழந்தைகளின் படிப்பு சம்மந்தப்பட்ட விஷயத்தில் உதவி செய்யலாம்.

24)சதயம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்கு அபிஷேக பொருட்களை தானம் வழங்கலாம்.

25)பூரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண வைபவங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

26)உத்திரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருந்து பொருட்களை தானமாக வழங்கலாம்.

27)ரேவதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்கு தேவையான உதவி, மங்கள வாத்தியம் வாசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.