சமையல் முதல் பரிமாறுதல் வரை அனைத்தும் செய்யும் ரோபோக்கள்! பிரபலமாகும் உலகின் முதல் தானியங்கி உணவகம்!
சமைப்பது முதல் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும் தானாக செய்யக்கூடிய இயந்திரங்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று தற்பொழுது பிரபலமாகி வருகின்றது.
இந்த தானியங்கி உணவகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் உணவுகளை தயார் செய்வது முதல் தொடங்கி அந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வரை அனைத்து வேலைகளையும் ரோபோ இயந்திரங்களே பார்த்துக் கொள்கின்றது.
அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில் பசடேனா என்ற பகுதியில் தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்கும் ‘கலி எக்ஸ்பிரஸ்’ உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகம் உலகின் முதல் தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்கும் உணவகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கலி எக்ஸ்பிரஸ் உணவகத்தை மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம், பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இயந்திரங்கள் மூலமாக தானியங்கி உணவகத்தை நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளது.
இந்த கலி எக்ஸ்பிரஸ் உணவகத்தில் மிஸோ ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் ரோபோ இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு ருசியான உணவுகளை தயார் செய்து கொடுக்கின்றது. இந்த உணவகத்தில் பணப்பறிமாற்றம் செய்ய பாப் ஐடி நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுத்துக் கூறுவதால் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து உணவுக்கு தேவையான பணம் பெறப்படுகின்றது.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களின். விருப்பத்திற்கு தகுந்த உணவுகளையும் ரோபோ இயந்திரங்கள் தயார் செய்து கொடுக்கின்றது. மேலும் ரோபோ இயந்திரங்கள் எண்ணெயில் பிரித்த உணவுகளையும், கிரில் கோழிக்கறியும் தயார் செய்தும் கொடுக்கின்றது.
இந்த கலி எக்ஸ்பிரஸ் உணவகத்தில் உணவுகளை ஆர்டர் பெறுவது, உணவுகளை தயார் செய்வது, உணவுகளை பரிமாறுவது போன்ற அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் செய்வதால் இந்த கலி எக்ஸ்பிரஸ் உணவகம் மக்களின் கவனம் பெற்று வருகின்றது.