முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி!
அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சி.வி.சண்முகம் அவர்கள் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் இன்று காலை அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த 18 ஆம் தேதி சபரிமலை சென்று வந்த சி.வி.சண்முகம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் சி.வி.சண்முகத்துடன் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் பரிதோசனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு கொரோனா அலை பரவாமல் இருக்க அரசு கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.