கேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

0
217
#image_title

கேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

தேங்காய் வைத்து கேரளா ஸ்டைலில் தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 10

*வர மிளகாய் – 8

*இஞ்சி – 1 துண்டு

*பூண்டு – 6 பல்

*புளி – எலுமிச்சை அளவு

*கருவேப்பிலை – 10

*துருவிய தேங்காய் – 1 கப்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் சூடானதும் வெங்காயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆற விடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, புளி, கருவேப்பிலை, துருவிய தேங்காய், உப்பு, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கி கொள்ளவும். இந்த முறையில் தேங்காய் தொக்கு செய்தால் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.

Previous articleபெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!
Next articleவீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!