உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!!
உங்கள் பூஜை அறை ஈசானிய மூலையில் இருக்க வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.
படிக்கட்டிற்குக் கீழ் இருக்கக் கூடாது. கழிவறை, குளியல் அறை சுவற்றிற்கு ஒட்டி இருக்கக் கூடாது.சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
ஆக்ரோஷமான தெய்வங்களின் படங்கள் இருக்கக் கூடாது. சிலை வைத்து இருந்தால் 1 ஜானுக்குள் இருப்பது நல்லது.
பூஜை அறைக் கதவுகள் இல்லையென்றால் ஒரு ஸ்கீரின் போட்டு மறைக்கவும்.
இரவு 10 மணிக்கு மேல் அந்த கதவு அல்லது ஸ்கீரினை திறக்காமல் இருப்பது நல்லது.
வாரம் ஒருமுறை பூஜை அறையில் உள்ள அலமாரியை மஞ்சள் தூள் பச்சைக் கற்பூரம் கலந்த தண்ணீரில் துடைத்து கோலம் போடுவது மிகவும் சிறந்தது.
பூஜை அறையில் சேதமான சாமி படங்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடவும்.
பூஜை அறை பொருட்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் ஒட்டடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாமி படங்களில் காய்ந்த மாலை, பூக்கள், எலுமிச்ச பழங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும்.