கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது?

0
242
#image_title

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது?

சிவப்பு அரிசி அல்லது மட்டை அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அரவணா பாயசம் அதிக சுவை மற்றும் தித்திப்பாக இருக்கும். இந்த அரவணா பாயசம் கேரள கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*சிவப்பு அரிசி – 1 கப்

*வெல்லம் – 3 கப்

*நெய் – 2 தேக்கரண்டி

*ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

*தேங்காய் – 1 துண்டு

செய்முறை…

1)முதலில் சிவப்பு அரிசியை இரண்டு முறை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு குக்கரில் கழுவிய அரிசியை சேர்த்து 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும்வரை வேக வைக்கவும்.

2)அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அது மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவைத்துக் கொள்ளவும்.

3)பின் அரிசி நன்கு வெந்து வந்ததும் அதில் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

4)பாயசம் சுண்டி நன்கு கெட்டியாக வந்ததும் அதில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கிளறவும்.

5)மற்றொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கடாய் வைத்து நெய் சேர்த்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காயை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்து இறக்கினால் அருமையான அரவணா பாயசம் தயார்.

Previous articleநடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை!
Next articleசளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!