கொழுவா மீன் பிரட்டல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
240
#image_title

கொழுவா மீன் பிரட்டல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

கொழுவா நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் பிரட்டல் செய்து சாப்பிடுவதை கேரளா மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

தேவையான பொருட்கள்:-

*கொழுவா மீன் – 1 கப்

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*கடுகு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – ஒரு கப்(நறுக்கியது)

*மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் தேங்காய் துருவல், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, 2 கொத்து கருவேப்பிலை, ஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

அதன் பின் சுத்தம் செய்து வைத்துள்ள 1 கப் கொழுவா மீனை அதில் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும். 5 முதல் 7 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த முறையில் கொழுவா மீன் பிரட்டல் செய்தால் சுவையாக இருக்கும்

Previous articleபண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!
Next articleநீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே!