“முட்ட சுர்க்கா” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

0
175
#image_title

“முட்ட சுர்க்கா” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

பச்சரிசி மற்றும் வடித்த சாதத்தை அரைத்து உப்பு சேர்த்து பணியாரக்கல்லில் ஊற்றி எடுக்கும் முட்ட சுர்க்கா கேரளாவில் பேமஸான உணவு வகை ஆகும்.

இந்த முட்ட சுரக்கா கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – ஒரு கப்

*சாதம் – ஒரு கப்

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊறவைக்கவும்

பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி, ஒரு கப் சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 1/2 மணி நேரம் ஊற விடவும். பிறகு அடுப்பில் ஒரு
பணியாரக்கல் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை பணியாரக்கல்லில் ஊற்றி வேக விடவும். இரு புறமும் திருப்பி போட்டு வேக விடவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் முட்ட சுர்க்கா மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த முட்ட சுர்க்காவிற்கு பூண்டு சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleஅட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?
Next articleவாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!