அந்த நடிகர் செய்த சாதனையை இனி யாராலும் டச் பண்ண முடியாது! அப்படி என்ன செய்தார்?

0
356
#image_title

அந்த நடிகர் செய்த சாதனையை இனி யாராலும் டச் பண்ண முடியாது! அப்படி என்ன செய்தார்?

“மக்கள் கலைஞர்”, “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மகா நடிகர் ‘ஜெய்சங்கர்’ அவர்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதே ஆண்டில் கிட்டத்தட்ட 6 படங்களில் கதாநாயகனாக நடித்து நட்சத்திர நடிகராக மாறினார். அவர் திரையுலகில் கால் எடுத்து வைத்த 16 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 168 படங்கள் நடித்திருக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை படங்களில் ஹீரோவாக ஜொலித்தார். தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அதிக கருப்பு வெள்ளை படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை ஜெய்சங்கர் தன் வசமாக்கினார். அதுமட்டும் இன்றி அன்றைய கால திரையுலகில் அறிமுகமான அதே வருடத்தில் அதிக படங்களில் நடித்த ஹீரோ என்று பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.

தமிழில் இவர் நடித்த முதல் படமான “இரவும் பகலும்” 1965 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. இப்படத்தை ‘ஜோசப் தளியத்’ இயக்கினார். ஜெய்சங்கருக்கு ஜோடியாக வசந்தா நடித்தார்.

அதே ஆண்டில் அடுத்து இவர் நடிப்பில் மே 21 அன்று வெளியான படம் “பஞ்சவர்ணக்கிளி”. கே.சங்கர் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர்.

இதை தொடர்ந்து அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 அன்று இவர் நடிப்பில் வெளியான படம் “நீ”. டி.ஆர். ராமண்ணா இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார்.

ஜெய்சங்கர் நடிப்பில் அக்டோபர் 23 அன்று வெளியான படம் “எங்க வீட்டு பெண்”. சாணக்யா இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கருடன் ஏ.வி.எம்.ராஜன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர்.

ஜெய்சங்கர் நடிப்பில் நவம்பர் 19 அன்று வெளியான படம் “குழந்தையும் தெய்வமும்”. கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஜமுனாவும், குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக நடித்த இப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.

Previous articleசரோஜாதேவி சொன்ன ஒரு வார்த்தை! செல்லமாக கோபித்துக் கொண்ட சிவாஜி!
Next articleஉஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!