இரண்டு நாளில் இறந்து விடுவேன் என்று சொன்னவர்! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டவர்..! யார் அந்த நடிகை?

0
331
#image_title

இரண்டு நாளில் இறந்து விடுவேன் என்று சொன்னவர்! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டவர்..! யார் அந்த நடிகை?

40 வருடங்களுக்கு முன் மான் போன்ற கண் அழகாலும், தனக்கே உரிய வசீகர நடிப்பாலும் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை தன் வசமாக்கியவர் ஸ்ரீவித்யா. இவர் நடிப்பை மட்டுமே பார்த்து ரசித்த பலருக்கு இவர் ஒரு நாட்டிய மங்கை, பாடகி என்று தெரிய வாய்ப்பு குறைவு தான்.

பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் மகளான ஸ்ரீவித்யா, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி அனைவரின் மனங்களிலும் நீங்க இடம் பிடித்தார்.

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பருவப் பெண்ணாக மாறிய இவர் கே.பாலச்சந்தர் இயக்கி வெளியான “நூற்றுக்கு நூறு” படத்தின் மூலம் சிறந்த நடிகையாக உருவெடுத்தார்.

இன்று சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் ரஜினி அவர்களுக்கு முதல் படமான “அபூர்வ ராகங்கள்” படத்தில் அவருக்கு மனைவியாக பைரவி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்து இருப்பார். படத்தின் முக்கிய வசனமான “பைரவி வீடு இது தானா?” என்ற வசனம் இன்று வரை நினைவு கூறும் ஒன்றாக இருக்கின்றது.

70, 80களில் கொடிகட்டி பறந்த ஸ்ரீவித்யா தன்னுடன் இணைந்து நடித்த கமல் மீது காதல் வயப்பட்டார். கமலுக்கும் ஸ்ரீவித்யா மீது காதல் இருந்த கதை எல்லாம் நாம் கேள்விப்பட்ட ஒன்று தான். ஆனால் கமல், ஸ்ரீவித்யா இருவருமே திரையுலகில் ஒரே சமயத்தில் அடி எடுத்து வைத்தவர்கள். வளர்ந்து வரும் நடிகர், நடிகையாக இருந்ததால் அவர்களின் காதல் கைகூடாமல் போனது.

இருவரும் தங்களின் காதலை மறந்து திரைப்பயணத்தை தொடர்ந்தனர். கமல் தமிழ் படங்களில் உச்சநட்சத்திரமாக கொடிக்கட்டி பறந்த அதே சமயத்தில் மலையாள படங்களில் ஸ்ரீவித்யா முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிய இவர் தனது திருமண வாழ்க்கையில் தோற்று விட்டார். தனது உழைப்பால் சேர்த்த சொத்துக்களை தன்னுடன் இருந்தவர்களிடம் பறிகொடுத்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு தேவதையாக இருந்த அவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிதான ஒன்றாக மாறியது. தன்னை அறிமுகப்படுத்திய தமிழ் சினிமாவை நம்பினார். காலம் கடந்துவிட்டதால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

அம்மா என்ற வேடத்திற்கு பொருத்தமானவர் ஸ்ரீவித்யா தான் என்று போற்றும் அளவிற்கு தனது ஈரம் நிறைந்த கண்கள், தெய்வீக முக பாவனையால் ரசிகர்களை கவர்ந்தார்.

மீண்டும் முட்டி மோதி பழையபடி பிஸியான நடிகையாக உருவெடுத்த அவரை புற்றுநோய் என்ற அரக்கன் படுத்த படுக்கையாக்கினான். தனக்கு முதுகு தண்டுவட புற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது என்பதை காலம் கடந்து அறிந்து கொண்ட ஸ்ரீவித்யா தனது இறுதி காலத்தில் சென்னையை விட்டு கேரளாவில் ஒரு இடத்தில் வசித்து வந்திருக்கிறார்.

புற்றுநோய் மீறிப்போகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் திரையுலகில் ஒன்றாக பயணித்த சக நடிகை ஒருவருக்கு போன் செய்து வரவழைத்து இருக்கிறார். அவரும் நீண்ட காலம் ஸ்ரீவித்யாவை பார்க்காததால் ஆர்வத்துடன் அவரை பார்க்க சென்று இருக்கிறார். ஆனால் ஸ்ரீவித்யா மருத்துவமனைக்கு வர சொல்லவே அங்கு சென்று பார்த்த அவருக்கு ஒரே அதிர்ச்சி. நான் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் தான் உயிருடன் இருப்பேன் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர் என்று கண்ணீருடன் சிரித்தபடி சொல்லி இருக்கிறார்.

அடுத்து தனது கடைசி நிமிடத்தில் கமலை பார்க்க ஆசைப்பட்ட அவருக்கு அந்த ஆசையும் நிறைவேற கண்ணீருடன் உலகை விட்டு மறைந்தார். கேரளா அரசு ஸ்ரீவித்யாவின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

அனைவரும் கைவிட்டு சென்ற போதும் அவரது நடிப்பு மட்டும் அவரை இறுதி வரை கைவிடவில்லை. தனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தால் தான் ஸ்ரீவித்யா இறந்த பின்னரும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Previous articleபானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!
Next articleகஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!