சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு தொடங்கிய நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
தை மாதம், பொங்கல் பண்டிகை அனைத்தும் வரப் போவதால் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றது. தங்கம் விலை ஏறினாலும் அதன் தேவை இருப்பதினால் நகை கடையில் மக்கள் கூட்டம் அலைமோதத் தான் செய்கிறது.
நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.46,480க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை சற்று ஏற்றம் கண்டு இருக்கின்றது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.46,560க்கும், ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.5,820க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.4,608 அதிகரித்து ரூ.55,312க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைப்படி ஒரு கிராம் ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கடந்த இரு தினங்களாக விலை மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது. 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.