உச்சத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!
தங்கம் என்றாலே ஒருவித ஆசை அனைவரிடமும் தொற்றிவிடுகிறது. கண்ணை கவரும் டிசைன்களால் தங்க ஆபரணத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த தங்கத்தின் விலை ஒருமுறை ஏற்றம் கண்டு விட்டால் அவ்வளவு எளிதில் சரியாது. அதனால் தான் தங்கம் சிறந்த முதலீடாக இருக்கின்றது.
சென்னையில் நேற்று விலைமாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.46,600க்கும், ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து, ரூ.5,825க்கும் விற்பனையானது. அதேபோல் விலைமாற்றம் இன்றி 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.50,840க்கும் விற்பனையானது.
இந்நிலையில் அதன் விலை சற்று அதிகரித்து இருக்கின்றது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,830க்கும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.46,640க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.50,880க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி ஒரு கிராம் ரூ.77க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பது நகை பிரியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.