கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி!

0
202
#image_title

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி!

உருளைக்கிழங்கை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான ரெசிபி எவ்வாறு செய்வது என்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்

1)உருளைக்கிழங்கு – 3
2)பெரிய வெங்காயம் – 1
3)பச்சை மிளகாய் – 2
4)கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்
5)மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
6)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
7)சோம்பு – 1/2 ஸ்பூன்
8)கடுகு 1 ஸ்பூன்-
9)கருவேப்பிலை – சிறிதளவு
10)வர மிளகாய் – 2
11)தேங்காய் பால் – 1 கப்
12)எண்ணெய் – தேவையான அளவு
13)உப்பு – தேவையான அளவு

செய்முறை…

அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணைய் ஊற்றி அவை சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். பிறகு 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். உருளைக்கிழங்கு வேகும் தருணத்தில் 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிய விடவும். பிறகு வெந்து கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு கலவையை இதில் ஊற்றி கலந்து விடவும். இவ்வாறு செய்தால் உருளைக்கிழங்கு கறி அட்டகாசமாக இருக்கும்.

Previous articleதெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!
Next articleமூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!