குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

0
408
#image_title

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பொதுவாக மருந்து குழம்பு தயார் செய்து கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களின் கர்பப்பை குணம் அடையவும், வலிமை பெறவும், குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கவும் மேலும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையவும் கொடுப்பார்கள். இந்த மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* பூண்டு
* சீலா கருவாடு அல்லது சீல் மீன்
* நல்லெண்ணெய்
* முட்டை
* தேங்காய்
* உப்பு

மருந்து குழம்பு செய்வதற்கு முன்னர் மருந்து குழம்புக்கு தேவையான மருந்து குழம்பு பொடி தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு தேவையான பொருட்கள்…

* சுக்கு
* மிளகு
* திப்பிலி
* நறுக்கு மூலம்
* ஓமம்
* கருஞ்சீரகம்
* பெருங்காயம்
* கடுகு
* சீரகம்

மருந்து குழம்பு பொடி செய்யும் முறை…

சுக்கை அம்மியில் வைத்து இடித்து பின்னர் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். அதே போல மீதமுள்ள கடுகு, சீரகம், ஓமம், பெருங்காயம், கருஞ்சீரகம், திப்பிலி, மிளகு ஆகிய பொருட்களை அம்மியில் வைத்து லேசாக இடித்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத பாட்டில் ஒன்றில் போட்டு மூடி வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.

மருந்து குழம்பு வைக்கும் முறை…

முதலில் கருவூட்டல் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழிந்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் பூண்டு மற்றும் தேங்காய் இரண்டையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு கப் தண்ணீரையும் இரண்டு டேபிள் ஸ்பூன் மருந்து குழம்பு பொடியையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பிறகு பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர் இதில் கரைத்து வைத்துள்ள கரைசலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் தேவைபட்டால் இதில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இதில் முட்டையை உடைத்து ஊற்றி தட்டை வைத்து மூடி விட வேண்டும்.

மிதமான தீயில் இந்த குழம்பு கொதிக்கட்டும். மிதமான தீயில் முட்டை வெந்த பிறகு குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Previous articleஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!
Next articleஎந்தவிதமான இருமலாக இருந்தாலும் சரி! குணமாக உதவும் எளிய பாட்டி வைத்தியம் இதோ!