PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

0
223
#image_title

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது.

“பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான மருந்து, விதைகள் வாங்குவதற்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி பெரிதும் உதவிகரமாக உள்ளதால் விவசாயிகள் மத்தியில் பிஎம் கிஷான் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

நிதி தொகை 6 ஆயிரத்தை மூன்று தவணைகளாக பிரித்து 2 ஆயிரம் என்று ஒவ்வொரு தவணை காலத்திலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகிறது. கடந்த நவம்பர் 15 அன்று 15 ஆவது தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலை அடுத்த பிப்ரவரி மாதத்தில் 16வது தவணை வழங்கப்பட இருக்கின்றது.

இந்த நிலையில் பிஎம் கிஷான் திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் பயனாளர்களாக உள்ள விவசாயிகள், பிஎம் கிஷான் திட்டத்தில் பயன்பெற வழங்கிய வங்கி கணக்கின் KYC விவரங்களை அடுத்த தவணைத் தொகை பெறப் போகும் தேதிக்குள் அப்டேட் செய்திருக்க வேண்டும்.

அதுமட்டும் இன்றி வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். பயனாளர்கள் தங்கள் நிலம் தங்களுடைய பெயரில் தான் உள்ளது உள்ளிட்ட நில விவர பணியை செய்து முடித்திருக்க வேண்டும் என்றும் இந்த பணிகளை செய்து முடிக்காத பயனாளர்களுக்கு தவனைத் தொகை செலுத்தப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

Previous articleபழனியில் பயன்பாட்டுக்கு வந்த புது மின் இழுவை இரயில்! மகிழ்ச்சியில் பக்தர்கள்!
Next articleதிமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!