திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

0
174
#image_title

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

சேலம் பாகல்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாகல்பட்டி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இதனால் இந்த தொகுதியின் எம்எல்ஏ அருள் அழைப்பின் பெயரில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பிடிக்காத திமுக நிர்வாகிகள், எம்எல்ஏ அருள் உரையாற்றக் கூடாது.. சைக்கிள் வழங்கக் கூடாது… என்று மாணவர்கள் முன் அடாவடி செய்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தற்பொழுது திமுக ஆட்சி.. இந்த இலவச சைக்கிளை திமுக தான் வழங்குகிறது.. எனவே நாங்களே கொடுத்துக் கொள்கிறோம்… நீங்கள் சைக்கிளை தொட வேண்டாம் என்று திமுக நிர்வாகிகள்… ஒரு எம்எல்ஏ என்று பாராமல் இரா.அருளிடம் வாக்குவாதம் செய்தனர்.

திமுகவின் இந்த அடாவடி செயல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்திவிட்டது. இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பிறகு பேசிய அருள் ஒரு எம்எல்ஏ என்ற உரிமையில் தான் இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்தேன்… அரசியல் செய்ய வரவில்லை.. இதில் அரசியல் ஏதும் இல்லை… ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் மாணவர்கள் முன் இவ்வாறு நடந்து கொண்டது வருத்தம் அளிக்கும் செயலாக உள்ளது… இதற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மனம் வருந்தி சட்டென்று அனைவரின் முன்பு கீழே விழுந்து மன்னிப்பு கேட்டார்.

ஒரு எம்எல்ஏ இவ்வாறு மன்னிப்பு கேட்பதை கண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரவுடி கும்பல் திமுக, கல்வி கற்கும் இடத்தில் அட்டூழியம் செய்கிறது என்று வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.