ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

0
238
#image_title

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல
கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை
ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற
வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம்
பார்த்திருப்போம்.

இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த
சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று
அரங்கேறியிருக்கிறது .

கடந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்திய தண்டனை சட்டம்
,குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம்
ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்
ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய சன்ஹிதா என்ற பெயர்களில் புதிதாக
சட்டங்கள் பார்லிமென்ட்டில் இயற்றப்பட்து.

இதனைத் தொடர்ந்து குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த்
வெங்கடேஷ் முன் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஐஇஏ ஆகிய குற்றவியல்
சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே
குறிப்பிடுவேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்
வெங்கடேஷ் தெரிவித்தார்.

தனக்கு இந்தி தெரியாது என்பதால் புதிய
பெயர்களை சரியாக உச்சரிப்பது கடினம் என்று நீதிபதி காரணத்தை
கூறினார்.
ஒரு குற்ற வழக்கை விசாரணைக்கு எடுக்க குற்றவியல் நடைமுறை
சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாக எழுப்பப்பட்ட
சட்டப்பூர்வ கேள்விக்கு விடை காண வழக்கறிஞர்கள் உதவும்படி நீதிபதி
கேட்டார்.

நீதிமன்றத்தில் இருந்த குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன்
வழக்கறிஞர்கள் திருவேங்கடம் முகமது ரியாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தெரிவித்தனர்.
அப்போது சிஆர்பிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா
சன்ஹிதா 2023 சட்டத்தின் விதியை சுட்டிக்காட்ட விரும்பிய கூடுதல் அரசு
வழக்கறிஞர் தாமோதரன், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 என்று
சட்டத்தின் பெயரை முழுமையாக குறிப்பிடாமல் "புதிய சட்டம்" என்று
நீதிபதியிடம் கூறினார்.

இதை கவனித்த நீதிபதி புத்திசாலித்தனமாக புதிய சட்டம் என அரசு
வழக்கறிஞர் தெரிவித்து விட்டார் என்றார். அதனால் அங்கிருந்த
வழக்கறிஞர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் மூன்று அடிப்படை குற்றவியல் சட்டங்களை அவற்றின் அசல்
ஆங்கிலப் பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவேன் என்று
வழக்கறிஞர்களிடம் கூறினார்.
தனக்கு இந்தி தெரியாது என்பதால் புதிய பெயர்களை சரியாக
உச்சரிப்பது கடினம் என்றும் நீதிபதி காரணத்தை கூறினார்.