சிம்ரன் தான் வேண்டும் என அடம் படைத்த சரண்! வில்லி ரோலில் பின்னிப் பெடல்!

0
166
#image_title

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மொத்தம் 18 நாட்களில் ஒரு படத்தையே நடித்து முடித்து கொடுத்த சிம்ரன் அவர்கள்.

 

ஒன்ஸ்மோர் என்ற விஜயின் படத்தின் மூலம் சிம்ரன் தமிழுக்கு அறிமுகமானார். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து ஆடுவதன் மூலமாகவே அந்த இடுப்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்.

 

அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், பிரசாந்த், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர். கொஞ்ச நாள் தமிழில் வராத சிம்ரன் பேட்ட படத்தில் ரஜினியுடன் சேர்ந்து தனது அற்புதமான நடிப்பை மறுபடியும் வெளிக்காட்டி இருப்பார். வயதாகி விட்டதே என்ற தோற்றம் முகத்தில் தெரியாத வண்ணம் இப்பொழுதும் அவர் இளமையுடன் இருக்கிறார்.

 

தான் நடித்த காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகையாகத்தான் சிம்ரன் இருந்தார். கால்ஷீட் கூட கிடைக்காமல் பல முக்கிய ஹிட் படங்களை தவறவும் விட்டிருக்கிறார். இருந்தாலும் நடிகைகளிலேயே மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட நடிகையாக சிம்ரன் இருந்து வந்தார்.

 

இந்த நிலையில் அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அசல், அட்டகாசம் என ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் சரண் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிம்ரனை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

 

பார்த்தேன் ரசித்தேன் படம் பிரசாந்த் நடிப்பில் லைலா மற்றும் சிம்ரன் ஜோடியாக நடிக்க மிகவும் வெற்றிப்பட்ட படமாக வந்தது. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார் சிம்ரன்.

 

அந்தக் கதாபாத்திரத்திற்கு சிம்ரன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் சரண். சிம்ரன் கால்ஷீட் கிடைக்காமல் சரண் அலைந்து திரிந்து இருக்கிறார். ஒரு சிங்கிள் டே கூட இல்லாமல் மிகவும் பிஸியாக நடித்து வந்த சிம்ரனிடம் கதையையாவது கேளுங்கள் என சரண் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை கேட்டதும் சிம்ரன் இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என சொல்லி தன் மேனேஜரிடம் மற்ற படங்களின் கால்ஷீட்டை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

 

இந்தப் படத்திற்காக மொத்தம் 18 நாள்கள் கால்ஷீட் கேட்ட சரணிடம் ஒரு நாள், 3 மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்கியே சிம்ரன் இந்தப் படத்தில் நடித்தாராம். அந்தளவுக்கு பார்த்தேன் ரசித்தேன் படத்தின் கதை சிம்ரனை வெகுவாக ஈர்த்திருக்கிறது. சரண் கணித்தது போலவே சிம்ரன் வில்லி கேரக்டரில் தன் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

author avatar
Kowsalya