கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..!

0
312
#image_title

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..!

கைகளில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க கடைகளில் ஹேண்ட் வாஷ் வாங்காமல்.. அதை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்…

*குளியல் சோப்பு
*கிளிசரின்
*தண்ணீர்
*பாட்டில்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு குளியல் சோப்பு எடுத்து ஒரு காய் சீவலில் சீவி கொதிக்கும் நீரில் கொட்டி கலந்து விடவும். தண்ணீரில் சோப்பு நன்கு கரைந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு அதில் ஒரு ஸ்பூன் கிளிசரின் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும். மறுநாள் எடுத்து பார்த்தால் சோப்பு நீரில் கிளிசரின் கலந்து அவை கெட்டி படிந்திருக்கும். அதை நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி ஹேண்ட் வாஷ் பாட்டிலுக்கு பயன்படுத்தக் கூடிய மூடியை போட்டு மூடவும்.

இந்த ஹேண்ட் வாஷ் பயன்படுத்த தயராகிவிட்டது.

தேவையான பொருட்கள்…

*தண்ணீர்
*எஸ்எல்இஎஸ்
*கிளிசரின்
*ஜி-சால்ட்

ஒரு பிளாஸ்டிக் பவுலில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி 200 மில்லி எஸ்எல்இஎஸ் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 50 மில்லி கிளிசரின் மற்றும் 50 கிராம் ஜி-சால்ட் சேர்த்து ஒரு மரக் குச்சி வைத்து கலக்கி விடவும்.

தொடர்ந்து கலக்கினால் நுரை உருவாக ஆரம்பிக்கும். இவ்வாறு வந்த பின்னர் ஒரு பாட்டிலில் இந்த ஹேண்ட் வாஷை ஊற்றி கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

Previous articleஇந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!
Next articleகிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!