உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்!

ஒருவர் வீட்டிற்கு மகா லட்சுமி குடியேறி விட்டால் அந்த வீட்டில் செல்வம் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இவ்வாறு சகல நன்மைகளையும் கொடுக்கும் லட்சுமி தாயார் அனைவரது வீடுகளிலும் தங்கிவிடுவதில்லை.

எவர் ஒருவர் வீட்டு பூஜை அறையை கோயில் போன்று வைத்துள்ளாரோ.. அவரது வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வார்.

வீட்டு பூஜை அறை மிகவும் தூய்மையாக வைத்திருத்தல், லட்சுமிக்கு உகந்த பொருட்களை சமையலறையில் வைத்திருத்தல்.. இவ்வாறு இருந்தால் மட்டுமே லட்சுமி கடாச்சம் கிடைக்கும்.

வீட்டு பூஜை அறையில் தினமும் பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் உங்கள் இல்லம் லட்சமி கடாச்சம் நிரம்பி காணப்படும்.

பஞ்சகவ்ய – பசுமாட்டு சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களை கொண்டு செய்யப்படும் விளக்கு.

இந்த விளக்கு தெய்வீக சக்தியை அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

இந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் வைத்து நெய் ஊற்றி இரட்டை திரி போட்டு விளக்கேற்றி வந்தால் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்ய வருவார்.

இவ்வாறு நடந்தால் கடன் பிரச்சனை, பண விரையம், பணப் பிரச்சனை ஆகியவை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.