பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

0
188
#image_title

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

குறிப்பு 01:-

செம்பருத்தி பூவை அரைத்து பேஸ்டாக்கி தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 02:-

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தலைக்கு உபயோகப்படுத்தி வந்தால் பொடுகிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 03:-

கஞ்சி வடித்த தண்ணீரை ஆறவிட்டு ஒருநாள் கழித்து அதை தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு அடியோடு நீங்கும்.

குறிப்பு 04:-

எள் எண்ணெய் போடுகிற்கு சிறந்த தீர்வு ஆகும். வாரம் ஒருமுறை எள் எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு 05:-

கருப்பு உளுந்து தேவையான அளவு எடுத்து ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இதை தலைக்கு பயன்படுத்தி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 06:-

தயிர் தேவையான அளவு எடுத்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 07:-

தேங்காய் எண்ணையுடன் சிறிது வெங்காயச் சாறு கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும்.