கேரளா ஸ்டைலில் தக்காளி பொரியல் – செய்வது எப்படி?

0
253
#image_title

கேரளா ஸ்டைலில் தக்காளி பொரியல் – செய்வது எப்படி?

அதிக சத்துக்களை கொண்ட தக்காளியில் சுவையான பொரியல் செய்வது குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி
*பெரிய வெங்காயம்
*இஞ்சி
*பூண்டு
*கறிவேப்பிலை
*உப்பு
*சர்க்கரை
*மஞ்சள் தூள்
*மிளகாய் தூள்
*பச்சை மிளகாய்
*தேங்காய் எண்ணெய்
*கடுகு
*சீரகம்

செய்முறை…

முதலில் தங்களுக்கு தேவையான அளவு தக்காளி, வெங்காயம் நறுக்கி வைக்கவும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் 6 பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் 1 ஸ்பூன் கடுகு மற்றும் 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து இடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு 1/2 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டு பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும்.

இவை அனைத்தும் வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

நன்கு நன்கு வெந்து வந்ததும் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த தக்காளி பொரியல் சப்பாத்தி, பூரிக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleநாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி?