சரிவை நோக்கி தங்கம்: இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்தது..!

0
290
#image_title

சரிவை நோக்கி தங்கம்: இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்தது..!

வட இந்தியர்களை விட தென் இந்தியர்கள் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்புகின்றனர். கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று அனைத்து நிகழ்வுகளிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ்வாறு நம் மக்கள் மனதில் தனி இடத்தை பெற்றுள்ள இந்த தங்கம் தை மாதம் தொடங்கிய போது ஜெட் வேகத்தில் இருந்து. ஆனால் தை மாதம் முடிய ஓரிரு வாரங்கள் இருக்கும் நிலையில் அதற்குள் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு இருக்கின்றது.

தங்கம் வாங்க முடிய விட்டாலும் தினமும் அதன் விலை நிலவரத்தையாவது தெரிந்து கொள்வோம்… என்ற ஆர்வம் பலரிடத்திலும் இருக்கின்றது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,850க்கும், ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் விலை இறங்கி இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

24 கேரட் கோல்ட்: நேற்று 1 கிராம் ரூ.6382க்கும், ஒரு சவரன் ரூ.51,056க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் விலை இறங்கி இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.6,360க்கும் சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.50,880க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளி: கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.76க்கும், 1000 கிராம் ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவை நோக்கி செல்வதால் நகை பிரியர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Previous articleகடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை! கை நிறைய சம்பளம்..!
Next articleஇந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!