இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
223
#image_title

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் சில வாரங்களில் அவை முடிவடைய இருக்கின்றது. அடுத்து சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கி விடும். தற்பொழுது குளிர்காலம் நிகழ்கிறது என்றாலும்.. பகலில் வெயில் பொளந்து கட்டுகிறது.

குளிர்க்கத்திலேயே இந்த நிலைமை என்றால்… வெயில் காலம் ஆரம்பமாகி விட்டால் என்ன ஆகும் என்ற கலக்கம் அனைவரிடமும் இப்பொழுதே ஏற்படத் தொடங்கி விட்டது.

கடந்த ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்த நிலையில் அதன் பின்னர் சொல்லும் அளவிற்கு மழைப் பொழிவு இல்லை.

கடந்த 2 வாரங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் வருகின்ற 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்.. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீட்டிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.