புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மன்னர் கதை படங்கள்..!

0
317
#image_title

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மன்னர் கதை படங்கள்..!

புரட்சி தலைவர் எம்ஜிஆர்… தனது ரசனையான நடிப்பினால் ரசிகர்களை தன் வசமாக்கியவர்… தமிழ் திரையுலகில் எத்தனை ஹீரோக்கள் முளைத்தாலும் எம்ஜிஆருக்கு இணையான நடிகர் வரப் போவதில்லை என்பது மக்கள் கருத்து.

தாய் அன்பு, அநீதிக்கு எதிராக நிற்கும் சாமானியன், மக்களுக்காக குரல் கொடுப்பவன்.. என்று அடையாளப்படுத்திக் கொண்ட எம்ஜிஆரை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கத் தொடங்கினர்.

தமிழில் பல படங்களில் நடித்துள்ள எம்ஜிஆர்… நடித்த மன்னர் கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் இதோ..

சக்கரவர்த்தி திருமகள்

1957 ஆம் ஆண்டு வெளியான சக்கரவர்த்தி திருமகள் சுயம் வரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இந்த சுயம்வரம் போட்டியில் ஜெயிக்கும் எம்ஜிஆர் இளவரசியை மணக்கிறாரா..? என்பதன் அடிப்படையில் கதையை நகர்கிறது.

இப்படத்தில் எம்ஜிஆர், அஞ்சலி தேவி, வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். பி.நீலகண்டன் இயக்கி ஆர்.எம்.ராமநாதன் தயாரித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜி.ராமநாதன் இசையில் 13 பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இதில் ஆட வாங்க அண்ணாத்தே, காதல் என்னும் சோலையிலே, கண்ணாளனே உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.

ராஜா தேசிங்கு

1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ராஜா தேசிங்கு படத்தில் எம்ஜிஆர் தேசிங்கு மற்றும் தாவூத் கான் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

எம்ஜிஆரை தவிர்த்து ராஜேந்திரன், டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

தன்னால் கொல்லப்பட்ட தாவூத் கான் தான் தன்னுடைய சகோதரர் என்ற உண்மையை அறிந்த தேசிங்கு… தன் சகோதரரை கொன்ற துக்கத்தில் தேசிங்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரம் இறப்பது போன்று அமைந்ததால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்காமல் புறக்கணித்தனர். இதனால் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இப்படத்தில் ஜி.ராமநாதன் இசையில் ஆதி கடவுள் ஒன்றுடன், இயலோடு இசைபோல், காதலின் பிம்பம், கானக்குருவி காட்டுப்புறா, மன்னவனே செஞ்சி, பார்க்கடல் அலைமேலே, வானமேவும் ராஜாகுமாரா, போடப்போறாரு, சராசாரணி கல்யாணி, வாழ்க எங்கள், பழனிமலை, வந்தான் பாரு.. ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

மன்னாதி மன்னன்

சேர நாட்டு இளவரசனாக எம்ஜிஆர் நடித்த “மன்னாதி மன்னன்” கடந்த 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மன்னாதி மன்னன் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர், நடனப் பெண் சித்ராவாக பத்மினி, கற்பகவல்லியாக அஞ்சலி தேவி நடித்திருப்பார்.

எம்.நடேசன் இயக்கி, தயாரித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் 12 பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இதில் “அச்சம் என்பது மடமையடா” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாக இன்றுவரை உள்ளது.

அரச கட்டளை

கடந்த 1967 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான அரச கட்டளை படத்தில் விஜயன் என்ற கதாபத்திரத்தில் எம்ஜிஆர், மோகனா என்ற கதாபாத்திரத்தில் ஜெயலலிதா, அமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, எம்.சி.ராமமூர்த்தி சத்யராஜா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அரச கட்டளைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

கே.வி.மகாதேவன் இசையில் 7 பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இதில் “வேட்டையாடு.. விளையாடு..” என்ற பாடல் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

எம்ஜிஆர் இயக்கி நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ 1978 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான கடைசி படம் ஆகும். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருப்பார்… எம்.எஸ்.விசுவநாதன் இசையில் மாங்கல்யம், வீரமகன் போராட, தாயகத்தின் சுந்தரமே, அமுதத் தமிழில் மற்றும் தென்றலில் ஆடிடும்… ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

Previous article12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை..!
Next articleகுட் நியூஸ்: இறங்கு முகத்தில் தங்கம்..! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு..!