டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

0
304
#image_title

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடையில் இனிப்பு, காரம் போன்ற திண்பண்டங்களை செய்தித்தாளில் வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்… ஆனால் இனி நியூஸ் பேப்பர், அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பலகாரங்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

நகைச்சுவை நடிகர் விவேக்.. ஒரு படத்தில் பஜ்ஜியை ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து பிழிந்து அதில் இருந்து கிடைக்கும் எண்ணெயை ஆட்டோவிற்கு டீசல் போல் ஊற்றும் காமெடி காட்சியை அனைவரும் அறிந்திருப்பீர்கள்… இது காமெடி காட்சியாக இருந்தாலும்.. நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.. சிலருக்கு நியூஸ் பேப்பரில் பலகாரத்தை வைத்து அழுத்தம் கொடுத்து எண்ணையை பிரித்து எடுத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும்… இவ்வளவு எண்ணெய் உறிஞ்சப்பட்ட பலகாரங்களை சாப்பிட்டால் மாரடைப்பு, இரத்த அழுத்தம் என்று ஆயுளை குறைக்கும் நோய்கள் ஏற்படும்.

அதுமட்டும் இன்றி நியூஸ் பேப்பரில் உள்ள அச்சு மைகள் நம் உயிருக்கு தீங்குகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. நியூஸ் பேப்பரில் பலகாரங்களை வைக்கும் பொழுது அந்த அச்சு மை பலகாரங்களில் படிந்து விடும்.

இவற்றை நாம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, வயிறு வலி, வயிறு வீக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், புற்றுநோய் போன்ற பல நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் தமிழக அரசு.. நியூஸ் பேப்பரில் பலகாரங்களை வைத்து வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் நியூஸ் பேப்பரில் தான் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பண்டங்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். இதை மீறி அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பண்டங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.

Previous articleசட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!
Next articleகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான செர்லாக் பொடி – வீட்டு முறையில்..!