சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

0
193
#image_title

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் உரையில் தமிழக அரசு தேசிய கீதத்தை புறக்கணித்து விட்டதாலும்.. தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்ணமைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இடம் பெற்றிருந்ததால் அதை வாசிக்க தனது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என்று ஆர்.என்.ரவி தெரிவித்தார். பிறகு சட்டசபையில் ஆரயோக்கியமான விவாதங்கள் நடைபெற வாழ்த்துவதாக.. என்று தெரிவித்து விட்டு ஆளுநர் உரையை படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து பாதிலியே வெளியேறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. அதில் அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்தை தனது உரைக்கு முன்பும்.. பின்பும் இசைக்க வேண்டும் என்று முதல்வருக்கும், சபாநாயகருக்கும் பலமுறை கடிதம் எழுதியும் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை… இதன் காரணமாக தான் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.