Kerala Recipe: வெங்காய வடை.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
220
#image_title

Kerala Recipe: வெங்காய வடை.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பெரிய வெங்காயத்தை கொண்டு கேரளா ஸ்டைலில் சுவையான வடை செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 2
*பச்சை மிளகாய் – 5
*அரிசி மாவு – 1/2 கப்
*கடலை மாவு – 1/2 கப்
*இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை நறுக்கி வைக்கவும்.

அதன் பிறகு இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் அரிசி மாவு, 1/2 கப் கடலை மாவு போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் மிளகாய் தூள், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

பிறகு அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். இறுதியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு தயாராக வைத்துள்ள வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் வெங்காய வடை மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleஉங்கள் குழந்தை பேசவில்லையா?? ஆட்டிஸமாக இருக்கலாம் பெற்றோர்களே உஷார்!!
Next articleமைனர் வயது உடையவர்களும் பான் கார்டு வாங்கலாம்!! எப்படி தெரியுமா?