Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

0
250
#image_title

Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?

உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் அசைவங்களில் ஆட்டிறைச்சியும் ஒன்று. மாட்டிறைச்சியில் குழம்பு, கிரேவி, ப்ரை, மட்டன் கோலா உருண்டை என பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் மட்டன் சில்லி மிகவும் சுவையாக கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)எலும்பு இல்லாத மட்டன் – 1/2 கிலோ
2)கரம் மசாலா – 1 ஸ்பூன்
3)மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
4)அரிசி மாவு – 4 ஸ்பூன்
5)சோள மாவு – 4 ஸ்பூன்
6)இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
8)உப்பு – தேவையான அளவு
9)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

முதலில் வாங்கி வந்த மட்டனை சுத்தம் செய்து வைக்கவும். பிறகு அதில் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதை 1/2 மணி நேரத்திற்கு மசாலாவில் நன்கு ஊறவிடவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு மசாலாவில் ஊறவைத்த மட்டனை போட்டு பொரித்து எடுக்கவும். இந்த மட்டன் சில்லியுடன் பொரித்த கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

Previous articleநீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
Next articleநெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!