kerala recipe: கேரளா ஸ்பெஷல் சுழியம்; சுவையாக செய்வது எப்படி?

0
184
#image_title

kerala recipe: கேரளா ஸ்பெஷல் சுழியம்; சுவையாக செய்வது எப்படி?

சுழியம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாகும். வேக வைத்த பச்சைப்பயறு + வெல்லத்தை வைத்து கேரளா ஸ்பெஷல் சுழியம் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மைதா – 1 கப்
2)பச்சைப்பயிறு – 1 கப்
3)வெல்லம் – 1 கப்
4)தேங்காய் துருவல் – 1/2 கப்
5)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
6)சுக்கு தூள் – 1/2 தேக்கரண்டி
7)மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
8)நெய் – ஒரு தேக்கரண்டி
9)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பச்சைப்பயறு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து வெல்லம் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும். வெல்லக் கரைசல் கொதிக்கும் தருணத்தில் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, நெய், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வேக வைத்த பச்சை பயறை போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு அடுப்பை அணைத்து பச்சை பயறு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு போட்டு சிறிது உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள பச்சைப்பயறு உருண்டையை மைதா மாவில் போட்டு உருட்டி எண்ணெயில் போட்டு வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த முறையில் செய்தால் கேரளா சுழியம் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleதூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள் உங்களுக்கு சைனஸ் தொல்லையே இருக்காது!!
Next articleஉங்கள் பரம்பரைகே இனி சர்க்கரை நோய் பிரச்சனை இருக்காது!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!