உங்கள் மனக் கவலை நீங்க விநாயகரை இப்படி வழிபடுங்கள்!
மனிதாக பிறந்த அனைவருக்கும் மனதில் பல கவலைகள் இருக்கும். பணக் கஷ்டம், விரும்பிய வாழ்க்கை கிடைப்பதில் தாமதம், விரும்பிய வேலை கிடைக்காமல் போதல், உடல் நலக் கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய மனக் கவலை நீங்க விநாயகரை வழிபடுவது நல்லது.
நம் வினை தீர்ப்பவன் விநாயகன். உலகின் முதல் கடவுளாக திகழும் விநாயகனை தொடரந்து வழிபட்டு வர தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக் கவலை முழுவதும் நீங்கி மன நிம்மதி ஏற்படும்.
வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம். அதற்கு முதலில் அருகம்புலை வைத்து மாலையாக கட்டி அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு எடுத்து செல்லவும்.
விநாயகர் முன்பு தங்களது மனக் கவலைகளை கூறி அவை விரைவில் சரியாகி விட வேண்டும் என்று மனதார விநாயகரை வேண்டி அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்றவும். இவ்வாறு வாரம் ஒருமுறை விநாயகரை வழிபட்டு வந்தால் தங்களது மனக் கவலைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.