நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

0
160
#image_title

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை முழுவதுமாக கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)புதினா
3)சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 5 புதினா இலை மற்றும் 3 இடித்த மிளகு சேர்க்கவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் நுரையீலில் படிந்து கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)திப்பிலி
3)பால்
4)மஞ்சள் தூள்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி குறைவான தீயில் சூடாக்கவும். அதன் பின்னர் 2 இடித்த மிளகு, சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு திப்பிலி அல்லது 1/4 தேக்கரண்டி திப்பிலி பொடி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்தால் நாள்பட்ட சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)நாட்டு சர்க்கரை
(அல்லது) வெல்லம்

1/4 தேக்கரண்டி மிளகை ஒரு உரலில் போட்டு இடிக்கவும். அதன் பின்னர் அதில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து இடித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இவ்வாறு செய்வதினால் நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.