பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

0
210
#image_title

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக செயல்ப்பட்டு வருகின்றன.

நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சியைஎதிர்க்கின்றனர்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார், 39 நாளாக அந்த யாத்திரையின் ஒருகட்டமாக ராகுல் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை வரவேற்க கான்பூரில் பேனர்கள் வைப்பது, சுவரோட்டிகள் ஒட்டுவது என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அந்த பேனரில் ராகுல் காந்தியை கிருஷ்ணராகவும், காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் ராய்யை அர்ஜுனராகவும் பேனர்கள் மற்றும் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.