Kerala Recipe: பீட்ரூட் பச்சடி கேரளா பாணியில் செய்வது எப்படி?
அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை கொண்டு கேரளா ஸ்டைலில் பச்சடி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
*பீட்ரூட் கிழங்கு – இரண்டு
*தயிர் – 1 கப்
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*துருவிய தேங்காய் – 1 கப்
*கடுகு – 1 தேக்கரண்டி
*வர மிளகாய் – 4
*ஜிஞ்சர் – 1 துண்டு
*சீரகம் – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் இரண்டு பீட்ரூட்டை தோல் நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு காய்கறி சீவல் கொண்டு அதை சீவி கொள்ளவும்.
அடுத்து அரை மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீவி வைத்துள்ள பீட்ரூட் மற்றும் தேங்காயை சேர்த்து கலந்து விடவும்.
அதன் பின்னர் ஒரு கப் தயிரை அதில் சேர்த்து கலந்து விடவும். இதனை தொடர்ந்து தேவையான அளவு உப்பு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து கலக்கவும். இந்த பீட்ரூட் கலவையை 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடவும்.
அதன் பின்னர் காரத்திற்காக வர மிளகாயை கிள்ளி போடவும். பிறகு ஊறவைத்துள்ள பீட்ரூட் கலவையை போட்டு நன்கு கலந்து சில நிமிடங்கள் வேக விட்டால் சுவையான பீட்ரூட் பச்சடி தயார்.